PassWord மறப்பது நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்றாக உள்ளது. WiFi Connect செய்யப்பட்ட உங்கள் Phone மூலம் மறந்து போன உங்க WiFi PassWord ஐ கண்டுபிடிக்கலாம்.
Android பயனராக இருந்தால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
Google Pixel Phone பயனர்கள் Settings பகுதிக்குச் சென்று Network பகுதியில் Internet ஐ Click செய்யவும்.
அடுத்து WiFi Network என்ற இடத்தில் உள்ள Gear icon ஐ கொடுக்கவும்.
பின் வேறு ஒருபக்கம் சென்று QR code உடன் WiFi PassWord உள்ளிட்ட Login விபரங்கள் காண்பிக்கப்படும்.
அடுத்து Android பயனர்கள் இதைச்செய்யலாம். Settings - connection - WiFi ஐ கொடுக்கவும்.
அதேபோல் WiFi Network என்ற இடத்தில் உள்ள Gear icon ஐ கொடுக்கவும்.
அடுத்து Eye என்ற ஐகன் காண்பிக்கப்படும். அதனைக் கொடுத்து உங்கள் Identity ஐ உறுதி செய்யவும்.
அதன்பின் PassWord காண்பிக்கப்படும்.