பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. உளுந்தில் இருக்கும் அதிகளவிலான
இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்கக்கூடிய ஒரு தானியம் ஆகும்.
உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு வருவதால் உடல் பலம் அதிகரிக்கும்.
உடலிலுள்ள எலும்புகள், தசைகள், நரம்புகள் அனைத்தும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உணவில் உளுந்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் .
உடல் சூட்டினால் வரக்கூடிய பாதிப்புகள் நீங்க பச்சை உளுந்தை காயவைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை சாப்பிட்டு வரலாம்.
உளுந்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றது. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், இரத்த அழுத்தம் சீராகக் காணப்படும்.