X தளத்தில் இருந்து வெளியேறி பயனர்கள் Bluesky என்ற புதிய சமூக ஊடக செயலியில் இணைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் Bluesky என்ற சமூக ஊடக செயலியில் கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான புதிய பயனர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பில்லியனர் இலோன் மஸ்க்கின் சமூக ஊடக செயலியான X தளத்தில் இருந்து வெளியேறி, பலர் இந்த புதிய Bluesky செயலியில் இணைவதாக தெரியவந்துள்ளது.
X தளத்தின் போக்கு மீது திருப்தியில்லாத பலர் இந்த தளத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
Bluesky செயலியில் செப்டம்பர் மாதம் 9 மில்லியன் பயனர்கள் இருந்த நிலையில், தற்போது 15 மில்லியன் பயனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Bluesky செயலியானது 2019 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனர் ஜெக் டோர்சியால் என்பவரால் தொடங்கப்பட்டது.
X தளம் வலதுசாரி கருத்துள்ள இடமாக மாறியதால், இடதுசாரி ஆதரவாளர்களின் புகலிடமாக Bluesky ஆதரவு பெற்று வருகிறது.