உடற் பருமனைக் குறைக்க மாம்பழம் சிறந்த வகையில் உதவுகின்றது. மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிகப்படியான உடற் கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
மாம்பழத்தில் உள்ள AntiOxidentகள் பெருங்குடல் புற்றுநோய், லுகேமியா மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
மாம்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், நரம்பிற்கு ஆரோக்கியம் கொடுத்து, நரம்புத் தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
மாம்பழத்தை பழமாகவோ அல்லது சறாகவோ எடுத்துக்கொள்வது சிறந்தது ஏனெனில் இது இதயத் தசைகளை ஆரோக்கியமாக செயற்பட உதவுகின்றது.
மாம்பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் மாம்பழத்தில் உள்ள Vitamin C ,Vitamin E சத்துக்கள் மூளைக்குச் செல்லும் நரம்புகளை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன இதன்மூலம் ஞாபகமறதி வராமல் பாதுகாக்கப்படுகின்றது.
மாம்பழத்தில் அதிகளவிலான Vitamin C உள்ளமையினால் கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.
குறைவான அதேசமயம் உப்புத்தன்மை அதிகம் கொண்ட நீரை அருந்துகின்றவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகின்றன. இவர்கள் மாம்பழத்தை தினமும் உட்கொண்டுவர சிறுநீரகக் கற்கள் தொடர்பான பிரச்சினையிலிருந்து விடுபட முடியும்.
மாம்பழங்களில் சருமத்திற்கு ஏற்ற Vitamin C மற்றும் Vitamin A சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. இவை இரண்டும் எமது சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அத்துடன் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் மாம்பழம் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
செரிமானப் பிரச்சினையிலிருந்து விடுபடவும் மாம்பழம் உதவுகின்றது. பல்வேறு ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ள மாம்பழத்தை எமது தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.