பொதுவாக வெயில் காலத்தில் சருமத்தின் நிறம் கருமையாவதால், ஆண்களை விட பெண்களே அதிகளவில் வருந்துகிறார்கள்.
பெண்கள் தங்களுடைய சருமத்தைப் பராமரிக்க பல இரசாயனம் கலந்த கலவைகளைப் பூசி வருகின்றனர்.எனினும் இவை அனைத்தும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே இரசாயனக் கலவைகளைத் தவிர்த்து இயற்கையான முறையில் எமது சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை அறிந்துகொள்வோம்.
தக்காளிப் பழத்தின் தோலை நீக்கி அதனுடன் பாலைக் கலந்து பேஸ்ட் போல அரைத்து முகத்திற்குப் பூசினால் முகத்தில் உள்ள அதிகளவான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.
தேனில் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் தயிர் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் காணப்படும்.
உருளைக்கிழங்கை பேஸ்ட் போல் அரைத்து அதனுடன் பாலையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாகக் காணப்படும்.
ஒலிவ் எண்ணெயை முகத்தில் பூசினால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.
இவ்வாறு வீட்டிலுள்ள பொருட்களைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் சருமத்தின் நிறத்தை எளிதாக அதிகரிக்க முடியும்.