இந்திய சினிமாவில் சிறிதளவு செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டக்கூடிய சந்தர்ப்பம் எப்போதாவது தான் நடக்கக்கூடும்.
அதில் மிக முக்கியமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான 'காந்தாரா' மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பிலும் இயக்கத்திலும் கர்நாடக மக்களின் தொன்மை மிகு வரலாற்றை மிகச் சிறப்பாகக் கூறிய இத் திரைப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படமானது யாரும் எதிர்பாராத அளவில் இந்திய மதிப்பில் 400 முதல் 450 கோடி ரூபாய்கள் வரை வசூல் செய்தது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிய நிலையில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதே மாதத்தில் இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் அவரது இறுதித் திரைப்படமான 'தளபதி 69' திரைப்படம் வெளிவரவுள்ளது.
'தளபதி 69' படக்குழு ஆரம்பத்திலேயே வெளியீட்டுத் திகதியை அறிவித்த பின் 'காந்தாரா 2' படக்குழு இப்போது அதே மாதத்தில் தங்களது திரைப்படமும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்ததனால் ரிஷப் ஷெட்டி தளபதி விஜய்யுடன் போட்டி போடத் தயாராகி விட்டார் என சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.