இத்தகைய உடல் வறட்சி ஏற்பட்டிருப்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறியலாம்.அவை தலைவலி, வறட்சியான சருமம், வெப்பத்தில் இருப்பது போல் உணர்வது, மஞ்சள் நிற சிறுநீர் வெளியேறுதல், வறட்சியான இருமல், எப்போதும் தாகமாக இருப்பது, பசியின்மை மற்றும் மயக்கம் போன்றவை.
இந்த மாதிரியான பிரச்சினைகள் உடலில் தெரிந்தால்,அப்போது பயப்படாமல், ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால்,அவற்றை சீக்கிரம் குணப்படுத்தலாம்.
அத்தகைய செயல்கள் என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
01.எப்போதும் முடிந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.மேலும் எங்கு வெளியே சென்றாலும், தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு தினமும் 2-3L தண்ணீர் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
02.நொறுக்கு தீனிகளை சாப்பிட நினைக்கும் போது பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சியை தவிர்க்கலாம்.ஏனெனில் காய்கறிகள் மற்றும் பழங்களில் நீர்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும். எனவே இதனை சாப்பிட்டாலும்,உடல் வறட்சியை தடுக்கலாம்.
03.தண்ணீர் மட்டும் உடல் வறட்சியை போக்க உதவுவதில்லை.பல பானங்களும் உடல் வறட்சியை போக்க பயன்படுகின்றன.அதிலும் இளநீர், எலுமிச்சை ஜூஸ், பதநீர் போன்றவை உடல் வெப்பத்தை தணிக்கவும், உடல் வறட்சியை போக்கவும் உதவியாக உள்ளன.எனவே இவற்றை அவ்வப்போது சாப்பிட்டால், வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
04.அதேபோல வெளியே செல்லும் போது, வெளிர் நிற ஆடைகளை அணிந்து, குடைகளை எடுத்துக் கொண்டோ அல்லது தலைக்கு தொப்பி போன்றவற்றை அணிந்து சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.