தயிரில் உள்ள விட்டமின் B6,B12 மற்றும் C, கல்சியம் ,புரதம் போன்ற சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. தயிரைப் பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
சருமத்தை மென்மையாக வைத்திருக்க, தயிருடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளைக் கலந்து சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். மஞ்சளில் உள்ள பல்வேறு எதிர்ப்புப் பண்புகள், சருமப் பிரச்சினைகளை நீக்க உதவுகின்றன.
தயிர், கஸ்தூரி மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் தேன் என்பவற்றைக் கலந்து சருமத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விட வேண்டும். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் சருமம் பொலிவாகக் காணப்படும்.