அதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ‘ராயன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ உருவாகியுள்ளது.மேலும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ்.இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகி வருகின்றது.
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தோமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இதற்கிடையில், இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பாரோ’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.கோல்டன் ஸ்பாரோ பாடலை சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார்,தனுஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அதன்படி,வரும் 25 ஆம் திகதி ‘காதல் பெயில்’ என்ற பாடல் வெளியாக இருப்பதாகவும்,இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.