தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் 'கங்குவா'. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.
இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, போபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இத்திரைபடம், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்தநிலையில் இயக்குநர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதேவேளை இந்தத் திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.