நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் '' நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்''. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் முதல் பாடலான `கோல்டன் ஸ்பேரோ' வெளியாகி இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலின் Views மற்றும் Reels எண்ணிக்கை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் பற்றிய புதிய தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி,எதிர்வரும் 25 ஆம் திகதி 'காதல் fail ' என்ற 2 ஆவது பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் ஜென் Z சூப் பாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இப்படத்தில் மேத்யூ தோமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.