இந்த மீனில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், விட்டமின் B, C,மற்றும் D ஆகியவை நிறைந்துள்ளன. இது ஒரு சுவையான மற்றும் சத்தான உப்பு நீர் உணவாகும்.
இந்த மீனை உட்கொள்வதனால் நாட்பட்ட வீக்கம், நீரிழிவு நோய் மற்றும் மூட்டு வாதம் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பிற ஊட்டச்சத்துக்களை இந்த வஞ்சிரம் மீன் கொண்டுள்ளது.
இந்த வஞ்சிரம் மீனை நாம் உணவில் ஏதேனும் ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். எனவே வாரம் ஒருமுறையாவது இந்த வஞ்சிரம் மீனை உட்கொண்டு பலன் பெறுவோம்.