நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு பகுதியாகிவிட்டது WhatsApp. குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் என அனைவரையும் எளிதாக தொடர்பு கொள்ள WhatsApp உதவுகிறது.
ஆனால், WhatsApp இல் அழைப்புகளை Recording செய்யும் வசதி இல்லாததால், சில முக்கிய குறிப்புகள் மற்றும் விபரங்களை பயனர்கள் இழந்து விடுகிறார்கள்.
WhatsApp நிறுவனமும் தனியுரிமை காரணங்களைக் கூறி இதுவரை அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவில்லை.
இருப்பினும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் WhatsApp அழைப்புகளைப் பதிவு செய்யும் வசதியை சாத்தியமாக்கலாம்.
Google Play Store இல் Cube ACR, Salestrail அல்லது ACR Call Recorder போன்ற செயலிகளைத் தேடி பதிவிறக்கம் செய்யவும்.
இந்த செயலிகள் WhatsApp மட்டுமல்லாமல், மற்ற பயன்பாடுகளிலும் அழைப்புகளைப் பதிவு செய்ய உதவும்.
செயலியை முதல் முறையாக திறக்கும்போது, மைக்ரோபோன் மற்றும் சேமிப்பு போன்ற அனுமதிகளை கேட்கும்.
இந்த அனுமதிகளை வழங்கவும். அதன் பின்னர் WhatsApp அழைப்பைத் தொடங்கினால், நீங்கள் பதிவிறக்கம் செய்த செயலி தானாகவே அழைப்பைப் பதிவு செய்யத் தொடங்கி விடும்.