Instagram Reels இப்போது பலருக்கு வருமான ஆதாரமாக இருந்து வருகிறது. முதலில் இந்தத் தளத்தில் வெறும் புகைப்படங்கள் மட்டுமே பகிரும் விதமாக இருந்தது. ஆனால் இப்போது பணம் சம்பாதிக்கும் இடமாக Instagram காணப்படுகிறது.
Instagram Reelsகளை எவ்வாறு பணமாக்குவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் இடத்தில் உள்ள தொடர்புடைய சில Brandகளை பார்த்து, அவற்றுடன் கூட்டு சேருவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள்.
நீங்கள் இடுகையிடும் வீடியோவில் குறித்த தயாரிப்பின் இணைப்பையும் வழங்கவும். அதன் மூலம் யாராவது பொருட்களை வாங்கினால், நீங்கள் பணத்தை பெறுவீர்கள். மேலும் சமூக ஊடகங்களில் Reels தயாரிப்பதன் மூலம் பலர் சம்பாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.