நடிகர் சித்தார்த் இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘Boys ' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் கடைசியாக நடித்த 'சித்தா' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து 'மிஸ் யூ' என்ற காதல் கதைக்களத்தை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் திகதி வெளியாகவுள்ளது.திரைப் படத்தின் Trailer சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் மோகன்ராஜன் வரிகளில் கோல்ட் தேவராஜ் பாடியுள்ள 'அக்கரு பக்கரு' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.