கருமையான சருமத்தை வெண்மையாக மாற்ற கற்றாழை பெரிதும் உதவுகின்றது. அத்துடன் சருமம் சார்ந்த பல பிரச்சினைகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் கற்றாழை பயன்படுகின்றது.
கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயைக் கலந்து சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது சருமத்திலுள்ள கருமையை நீக்கி சருமத்தை வெண்மையாக வைத்துக் கொள்கின்றது.
சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் தேயிலை மர எண்ணெயை (Tea Tree Oil) கலந்து முகத்தில் பூசி நன்கு காய வைத்த பின்னர் மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவிவர சருமம் பொலிவாகக் காணப்படும்.
இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளைக் கலந்து சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு காய வைத்த பின்னர் குளிர்மையான நீரால் கழுவ வேண்டும். இது எமது சருமத்தைப் பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
எனவே மேற்குறிப்பிட்ட இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி எமது சருமத்தைப் பாதுகாத்துக் கொள்வோம்.