நடிகை கீர்த்தி சுரேஷ் இந்திய திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், துபாயை சேர்ந்த தொழிலதிபர் Antony Thattil என்பவரை கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
கல்லூரியில் படிக்கும்போதே கீர்த்தி சுரேஷ் மற்றும் Antony இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது என்றும் கூறப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக தனது காதலை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக தனது காதலை அவருடைய X தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அந்த பதிவில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் இந்தப் பதிவிற்கு, நடிகை த்ரிஷா உட்பட 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் Likes செய்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கோர் Comments உம் பதிவு செய்து வருகின்றனர்.