இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ள நிலையில்,கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் இன்னும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"கேம் சேஞ்சர்" படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்,இத்திரைப்படத்தின் 3 ஆவது பாடலான 'லைரானா' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
தமன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார்.இத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.