எமது சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்வதற்கு பால் பெரிதும் உதவுகின்றது. சரும அழகை அதிகரித்துக் கொள்வதற்கு பாலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
ஒரு தேக்கரண்டி பாலுடன், இரண்டு தேக்கரண்டி தேனைக் கலந்து சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு காய வைத்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவலாம். இது எமது சருமத்தைப் பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும்.
பாலுடன் சிறிதளவு பன்னீரைக் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.
கரட்டை சுத்தமாகக் கழுவிய பின்னர் அரைத்து அதன் சாற்றுடன், இரண்டு தேக்கரண்டி பாலைக் கலந்து சருமத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் கழுவலாம். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்துவர முகப்பருக்கள் நீங்கி சருமம் பாதுகாக்கப்படும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சருமத்தைப் பாதுகாத்திடுவோம்.