தமிழ், மலையாளம் ,தெலுங்கு என பல இரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் நடிகர் துல்கர் சல்மான்.
இவர் நடிப்பில் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வெளியான திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்த இத்திரைப்படம் இரசிகர்களின் நல்ல விமர்சனங்களைப்பெற்று வருகிறது. இந்திய மதிப்பில் சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா என தென்னிந்தியாவில் கணிசமான வெற்றியைப் பெற்றது.
இந்தநிலையில் தமிழ் நாட்டில் மட்டும் இத்திரைப்படம் இந்திய மதிப்பில் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.