வெறும் வயிற்றில் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும். இதில் செரிமான நொதிகள் இருப்பதால் குடல் இயக்கத்தை மென்மையாக்க வைக்ககும் என அறியப்படுகிறது.
செரிமானக் கோளாறுகளை நீக்க பப்பாளிப்பழம் பெரிதும் உதவுகின்றது.
விட்டமின் ( A ) மற்றும் (C ) ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ள பப்பாளி, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை விலக்கி வைக்க உதவுகிறது.
எடையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் ஒரு கப் பப்பாளி Juice குடிக்கலாம். இது உடலை புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்
பப்பாளியில் விட்டமின் C பொற்றாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளதால், குடல் இயக்கம் சீராகக் காணப்படும். மேலும் இது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து,இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
எனவே அன்றாடம் பப்பாளி JUICE இனை மேற்குறிப்பிட்டுள்ள முறையின் படி அருந்தி ஆரோக்கியத்தினை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.