ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அமரன்'. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமரன் படக்குழுவினர் இந்திய தலைநகர் டெல்லிக்கு சென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரைச் சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் தங்களது x தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.