சிறிதளவு வேப்பிலையுடன், அரை தேக்கரண்டி மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவி வர, கரும்புள்ளிகள் இலகுவாக நீங்கும்.
Orange பழத்தின் தோலை காய வைத்து தூளாக அரைத்து அதனுடன் சிறிதளவு பசுப்பாலையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் சுத்தமாகக் கழுவ வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்துவர கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து சருமம் பொலிவாகக் காணப்படும்.
அரை கப் தயிருடன் சிறிதளவு கிழங்கு சாறு சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இரண்டு தேக்கரண்டி எலுமிச்சம் பழத்தின் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தயிரைக் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இது சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தைப் பிரகாசமாக வைத்துக்கொள்ளும்.
எனவே மேற்குறிப்பிட்ட இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி சரும அழகைப் பாதுகாப்போம்.