பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் லிளையாடி வரும் இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் சபை 60 இலட்சம் ரூபாய் (6 மில்லியன்) நிதியை அனுசரணையாக வழங்கியுள்ளது.
இதனிடையே பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சிகளை மேற்கொள்ள மைதான வசதிகள், வலைப்பயிற்சிக்கான ஆடுகளங்கள் மற்றும் பயிற்சிக்குத் தேவையான கிரிக்கெட் உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கவும் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.