அவுஸ்திரேலிய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹெசல்வூட் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இம்மாதம் 6ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக நடைபெறஉள்ளது.
அதன்படி, இந்த டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இருந்து ஹெசல்வூட் உபாதையினால் விலகியுள்ளார். அதேநேரம் அவுஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர்களான சோன் அப்போட் மற்றும் ப்ரன்டண் டொக்கட் ஆகிய வீரர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் ஸ்கொட் போலன்டும் அவுஸ்திரேலிய குழாத்தில் மேலதிக வேகப்பந்து வீச்சாளராக காணப்படுகின்றார். இவர்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஹெசல்வூட்டுக்குப் பதிலாக களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய ,அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.