நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான "தளபதி69" படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துவிட்ட நிலையில் அவர் இறுதியாக நடிக்கும் படத்தின் மீது இரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார்.
இந்நிலையில், தளபதி 69 படம் குறித்து தற்போது ஒரு அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் FirstLook Poster புத்தாண்டு அறிவிப்பாக வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.