காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து 1994ஆம் ஆண்டு 'The Lion King என்ற பெயரில் கார்டூன் Technology யிலும், அதே பெயரில் 2019 ஆம் ஆண்டு Animation தொழில்நுட்பத்திலும் வெளியாகிய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இந்த ''The Lion King ' திரைப்படத்திற்கு ஒரு தனி இரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து 'The Lion King ' திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான முறையில் பல மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் இம்மாதம் 20 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரைக்கு வரவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் முஃபாசா கதாபாத்திரத்திற்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு குரல் கொடுத்துள்ளார்.
முஃபாசா 'The Lion King ' திரைப்படத்தின் பிரம்மாண்ட ஊடக நிகழ்வின் போது நடிகர் மகேஷ் பாபு பிரத்தியேகமான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புதிய போஸ்டர் தற்பொழுது வைரலாகி வருகிறது.