'நான் எத்தனை வயது வரை இருப்பேன்' என்ற கேள்வியை இனி AI தொழில்நுட்பத்திடமும் கேட்கலாம்.
AI உதவியுடன் செயற்படும் Death Clock என்ற செயலி அண்மையில் வெளியானது.
பணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய இந்த APP, குறுகிய காலத்திலேயே 1 இலட்சத்து 25 ஆயிரம் பதிவிறக்கங்களைப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த App வாழ்நாட்களைக் கணிக்கக்கூடியது. இதற்காக மனித ஆயுள் குறித்து மேற்கொள்ளப்பட்ட 1200 ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள் தொகுக்கப்பட்டு, AI-க்கு உள்ளீடாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகளில் பங்கேற்ற மில்லியன் கணக்கானோரின் தரவுகள் மூலம் AI-க்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
இந்த App ஐ தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியுமென கூறப்படுகிறது.
நீண்ட ஆயுளுடன் இருக்க நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த App கூறும் முக்கிய தீர்வாக இருக்கிறது.