பொதுவாக நம்மில் பலருக்கு ஒற்றைத் தலைவலிப் பிரச்சினை இருக்கும்.
இந்த நோய் பல காரணங்களால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
உதாரணமாக தூக்கமின்மை, சாப்பிடாமல் இருப்பது, மன அழுத்தம், அதிக சத்தம், வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய காரணங்களைக் கூறலாம்.
இந்த நோய் இருப்பவர்கள் அவர்களின் உடல்நிலையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சில உணவுகளை சாப்பிடுவது ஒற்றைத் தலைவலிப் பிரச்சினை இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
அவ்வாறான உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்துகொள்வோம்.
1.ஒற்றைத் தலைவலி பிரச்சினையுள்ளவர்கள் ஊறுகாய் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஊறுகாயில் அதிக அளவு டைராமைன் மற்றும் உப்பு உள்ளது. இவை ஒற்றைத் தலைவலிக்கு மேலதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
2. ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட சிலர் காரமான உணவுகளை அதிகம் விரும்புவார்கள். இப்படியானவர்கள் சிவப்பு மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இவை ஒற்றைத் தலைவலியை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
3. தற்போது கடைகளில் விற்பனையாகும் பல வகையான உணவுகளில் செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒற்றைத் தலைவலிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கடைகளில் வாங்கும் செயற்கை இனிப்பு உணவுகளை சாப்பிடாமல் இருப்பது சிறந்தது.