கோப்பி உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கிறது மற்றும், அன்றைய நாளை புதியதாகவும், புத்துணர்வுடனும் வைத்திருக்கிறது. கோப்பியின் வாசனை நம்மை வசீகரிக்கிறது. இதன் சுவை கசப்பானது என்றாலும், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உலகம் முழுவதும் மக்கள் பெரிய அளவில் கோப்பியை சுவைக்கின்றார்கள்.
சருமத்தை பொறுத்தவரையில் கோப்பியை சுவைப்பதால் ஒவ்வாமை மற்றும் கண்களின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு சிகிச்சையளிக்கின்றது.எனினும், கண்களை சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைப்பதில் இது நன்மை பயக்கிறது.
இது நீரிழிவு நோய்க்கு மிகவும் நன்மை பயக்கிறது. நீரிழிவு நோயின் இரண்டாம் வகை நோயாளிகள் சர்க்கரையின் அளவை குறைத்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கோப்பியை அருந்துவதால் சர்க்கரை நோயை 50% குறைக்க முடியும்.
இதயத்திற்கு நன்மை பயக்கும் இந்த கோப்பியை தினமும் காலை வேளையில் அருந்துவதால்,பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கிறது.
உடற்பருமனை கணிசமாகக் குறைக்க கோப்பி உதவுகிறது. இதில் பொற்றாசியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் கொழுப்பைக் குறைக்கிறது.தினமும் இரண்டு கப் கோப்பி எடுத்துக் கொள்ளுவது நல்லது.
கோப்பி நரம்புகளைத் தூண்டி ஆற்றலை அதிகரிக்கும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். அது மட்டுமின்றி, மூளை சம்மந்தப்பட்ட நோய்களான டிமென்ஷியா, அல்சைமர் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.