1980களில் தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. தன் அழகாலும், நடனத்தாலும் இரசிகர்களைக் கட்டிப்போட்டவர்.
புகழின் உச்சியில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தது.
ஹிந்தியில் 'The Dirty Picture' என்ற பெயரில் நடிகை வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவாக இப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
தமிழில் 'ஒரு நடிகையின் டைரி' உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியானது.
இந்த நிலையில், மீண்டும் ‘Silk Smitha: Queen of the South ‘ என்ற பெயரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஜெயராம் சங்கரன் இயக்கத்தில் STRI Cinema என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதனை இந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்தில், நடிகை சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார். 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.