அதேநேரம், பயனர்களின் நலன் கருதி அடிக்கடி புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில் WhatsApp, பழைய IPhone மற்றும் iPad மொடல்களுக்கான ஆதரவை நிறுத்தவுள்ளது.
அதன்படி, iPhone 5s, iPhone 6, iPhone 6 Plus, ஆகியவற்றில் WhatsApp தனது ஆதரவை மீளப்பெறவுள்ளது.
iPad mini 2, iPad mini 3 ஆகிய iPad மொடல்களும் WhatsApp இன் ஆதரவை இழக்கவுள்ளன.
WhatsApp ஐ தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் புதிய மொடல்களுக்கு மேம்படுத்த வேண்டும் அல்லது தங்கள் சாதனங்களை அண்மைய ஆதரிக்கப்பட்ட iOS அல்லது iPadOS பதிப்புக்கு புதுப்பிக்க வேண்டும்.
புதிய அம்சங்களை செயற்படுத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும் சமீபத்திய மென்பொருள் பதிப்புகளை ஆதரிப்பதில் WhatsApp அதிக கவனம் செலுத்தி வருகின்றது.