2025-இல் சூரிய கிரகணம் 2 முறை நிகழவுள்ளது. மார்ச் 29 மற்றும் செப்டம்பர் 21 ஆம் திகதிகளில் சூரிய கிரகணம் வர உள்ளது.
மார்ச் 29, 2025 அன்று நிகழும் பகுதி சூரிய கிரகணம், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் வடக்குப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பகுதி, தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகள், அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பகுதி ஆகியவற்றில் தெரியும்.
அதாவது, பெர்முடா, போர்த்துக்கல், கனடா, அமெரிக்கா, மொரோக்கோ, ஸ்பெயின், கிரீன்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஐஸ்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.
மேற்கூறிய கிரகணத்தைப் போலவே, செப்டம்பரில் நிகழும் கிரகணம் அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகள், பசிபிக், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும்.
சமோவா,பிஜி,நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, அண்டார்டிகாவில் மக்முர்டோ உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் பகுதிகளில் சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.