மலையாளத் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி இரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் பகத் பாசில் தற்போது பொலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
நடிகர் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ஏராளமான இரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் 'வேலைக்காரன்', 'சூப்பர் டீலக்ஸ்' , 'விக்ரம்', 'மாமன்னன்' , 'வேட்டையன்' என அடுத்தடுத்த வெற்றித் திரைப்படங்களின் மூலம் கவனம் பெற்ற பகத் பாசில் தொடர்ந்து 'புஷ்பா' திரைப்படம் மூலம் தெலுங்கிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் பொலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் பகத் பாசில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிப்தி டிம்ரி நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.