சுரைக்காயை சமைத்துச் சாப்பிடுவது எவ்வளவு நல்லதோ அதே அளவுக்கு அதன் சாற்றைப் பிழிந்து பச்சையாகக் குடிப்பதும் நமக்கு நன்மையைத் தருகிறது. இந்த சுரைக்காய் சாற்றில் பொட்டாசியம், விட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
CARBOHYDRATES, VITAMINS, MINERALS போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் சுரைக்காயில் நிறைந்திருக்கின்றன.
இந்த சுரைக்காய் Juice சருமப் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாகக் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் எதிர்த்துப் போராடவும் இந்த சுரைக்காய் உதவியாக இருக்கும்.
இந்த சுரைக்காய் Juice இல் நெல்லிக்காய் மற்றும் இஞ்சி, எலுமிச்சை, மிளகு, சிறிது உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் குடிக்கலாம். வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.
சுரைக்காய் பழச்சாற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அத்துடன் வயிற்றுப் போக்கை நிறுத்தவும் உதவுகிறது.
சுரைக்காய் சாற்றை குடித்து வந்தால் நமது இதய ஆரோக்கியம் மேம்படும்.
எனவே சிறந்த ஆரோக்கியத்தைத் தரும் சுரைக்காய் Juice ஐ அருந்தி ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.