1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் 'பில்லா'.
இந்தத் திரைப்படம் வெளிவந்து சுமார் 27 வருடங்களுக்குப் பின் 'பில்லா' திரைப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது. அதில் பில்லாவாக அஜீத் நடித்த நிலையில் அந்தத் திரைப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கியிருந்தார்.
இந்தத் திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் 'பில்லா 2 ' வெளியாகியது. 'பில்லா' திரைப்படம் வெளிவந்து சுமார் 5 ஆண்டுகள் கழித்து அஜித்தின் நடிப்பில் வெளிவந்த 'பில்லா 2 ' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் 'பில்லா 3' குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த விஷ்ணு வர்தன் 'பில்லா 3 ' திரைப்படத்திற்குப் பதிலாக அஜித்துடன் பிறிதொரு திரைப்படத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.