Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் ரீ-ரிலீஸ் ஆகும் 'தளபதி' திரைப்படம் !

SooriyanFM Gossip - சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் ரீ-ரிலீஸ் ஆகும் 'தளபதி' திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இம்மாதம் 12ஆம் திகதியாகும். அவருடைய பிறந்தநாளன்று மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தொடர்பான போஸ்டரும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் ரஜினிகாந்த் இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரீ-ரிலீஸ் ஆகவிருக்கும் இத்திரைப்படம் முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1991 ஆம் ஆண்டு November 5 ஆம் திகதி வெளியான ' தளபதி ' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மம்முட்டி, அரவிந்த் சுவாமி,ஷோபனா,அம்ரிஷ் பூரி, ஸ்ரீவித்யா, பானுப்ரியா,கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்தப் படம் இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய்கள் செலவில் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

'தளபதி' திரைப்படம் ரிலீஸ் ஆன November 5 ஆம் திகதி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’குணா’ திரைப்படமும் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

‘குணா’ திரைப்படமும் டிஜிட்டல் வடிவில் ரீ-ரிலீஸ் ஆகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top