கடலை மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் Face Pack சருமத்தில் உள்ள பருக்களை நீக்க உதவுகின்றது.
ஒரு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி Green Tea ஆகியவற்றைக் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
இந்த கடலை மாவு Face Pack முறையினை வாரத்தில் இரண்டு தடவைகள் செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைந்து விடும்.
கடலை மாவை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து சருமத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் இளமையாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் சருமம் பொலிவாகக் காணப்படும்.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சரும அழகைப் பாதுகாத்துக் கொள்வோம்.