சுற்றுலா இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட போர்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
பகலிரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஸ்டார்க் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 337 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 140 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 175 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து , 19 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணிக்கு இலக்காக வழங்கியது.
விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் தெரிவு செய்யப்பட்டார்.