நடிகர் விக்ரம் தனது 62ஆவது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை 'சித்தா' பட இயக்குநர் அருண் குமார் இயக்குகிறார்.
இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2ஆம் பாகம் முதலில் வெளியாகவுள்ளது.
'வீர தீர சூரன்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியாகிய
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் வீடியோக்கள் என்பன இரசிகர்களிடயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.