மனிதர்களை சுத்தம் செய்யும் அதிநவீன சலவை இயந்திரம் ஒன்றை பிரபல ஜப்பானிய நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
ஜப்பானிய தயாரிப்பான 'மிரைய் நிங்கன் சென்டாகுக்' என்ற இயந்திரம், 15 நிமிடங்களில் மனிதர்களை முழுமையாக சுத்தப்படுத்தும்.
வெதுவெதுப்பான நீர் நிரம்பிய இந்த இயந்திரத்தில், அதிவேக நீர் மற்றும் நுண்ணிய குமிழ்கள் உங்கள் உடலில் பட்டு அழுக்குகளை முழுமையாக அகற்றும்.
AI மூலம் உங்கள் உடல் அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு, தண்ணீரின் அழுத்தம் மற்றும் வெப்பநிலை என்பனவற்றை தானாகவே குறித்த இயந்திரம் நிறுவகிக்கும்.
பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் அமைதியான மற்றும் புத்துணர்ச்சியான அனுபவத்தை வழங்குகிறது.
இந்த நவீன இயந்திரம் ஒசாகா எக்ஸ்போ 2025 இல் அறிமுகமாகவுள்ளது.
தற்போது இதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.