தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனது இறுதித் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்க அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். பிரபல 'KVN' நிறுவனம் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது.
'தளபதி 69' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி புது வருடத்தை முன்னிட்டு படக்குழு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.