சின்னத் திரையிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்திருந்தது.
இவரது திரைப்பட வரிசையில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக அமரன் மாறியிருந்தது.இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கின்றார்.
இதனிடையே இராணுவ உடையணிந்து,சமயலறையில் இருந்து தனது மனைவியின் பிறந்த நாளையொட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோவை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இவர் பகிர்ந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 107 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராமில் சொந்த வீடியோவிற்கு 100 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களைப் பெற்ற நடிகராக சிவகார்திகேயன் மாறியுள்ளார்.