மன அழுத்தம் என்பது நமக்கு பிடிக்காத ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதால் ஏற்படுவதாகும். இது ஒரு இயற்கையான மனித எதிர் வினையாகும்.
இந்த மன அழுத்தம் நம் வாழ்வில் ஏற்படும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கவலைகளை எதிர்கொள்ள நம்மைத் தூண்டுகிறது.
மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, உடலில் ஒரு எச்சரிக்கை அமைப்பை உருவாக்குகிறது. இதனால் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு இது காரணமாக உள்ளது.
குறிப்பாக கவலை, மனச்சோர்வு, செரிமானப் பிரச்சனைகள், தலைவலி, தசை மற்றும் உடல் வலி, நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம், தூக்கமின்மை, எடை அதிகரிப்பு, ஞாபக மறதி, கவனக்குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தினமும் சீரான உடற்பயிற்சிகள் மற்றும் தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும் அத்துடன் ஆரோக்கியமான உணவுகள் உண்ண வேண்டும் இவ்வாறு செய்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
நகைச்சுவை உணர்வுடன் இருப்பது மற்றும் நகைச்சுவைகளை இரசிப்பது, நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குவது, புத்தகம் படிப்பது மற்றும் இசையை கேட்பது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் போது மன அழுத்தம் குறைந்து வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.