Facebook, Gmail, Instagram , X, YouTube, IMO என பல்வேறு செயலிகளில் பயனர்கள் கணக்குகளை வைத்திருக்கிறார்கள்.
அதில் பலருக்கு எதற்கு என்ன PassWord என்பது மறந்துவிடும்.
அதில் முக்கிய பங்கு வகிப்பது Gmail Account ஆகும். Gmail PassWord மறந்து விட்டது என்றால், கண்டுபிடிக்க எளிய வழிகள் உள்ளன.
முதலில் Chrome Browser ஐ Desktop அல்லது Mobile இல் Open செய்ய வேண்டும்.
பின்னர், Top பக்கத்தில் வலது புறத்தில் உள்ள Settings Option ஐ Click செய்ய வேண்டும்.
பின்னர் இடதுபுறம் ஓரத்தில் உள்ள Autofill Option ஐ தேர்வு செய்ய வேண்டும்.
அதில், முதலில் இருக்கும் Passwords Option ஐ தேர்வு செய்ய வேண்டும்.
தற்போது, Google Chrome இல் Store ஆகியிருக்கும் கணக்குகளின் Passwords மறைக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றிருக்கும்.
உங்களுக்கு தெரிய வேண்டிய கணக்கின் PassWord ஐ காண, Password Visibility Icon ஐ Click செய்ய வேண்டும்.
பின்னர், அருகிலிருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட Menu ஐ Click செய்து, ID மற்றும் PassWord ஐ Copy செய்துகொள்ளலாம்.
அதேவேளை நீங்கள் Chrome இல் PassWord ஐ Save செய்திருக்காவிட்டால், PassWord ஐ மீட்டெடுக்க Forget Password கொடுக்க வேண்டும்.