பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்துக்களும் கல்சியமும் கிடைக்கிறன. இவை இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும் வெந்தயக் கீரை உதவுகின்றது.
உடல் உஷ்ணத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுவோர் வெந்தயக் கீரையைச் சாப்பிடலாம். இதன் குளிர்ச்சித்தன்மை உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியைக் கொடுக்கும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிதளவு சோம்பு மற்றும் உப்பினையும் சேர்த்து அரைத்து மோரில் கரைத்து அருந்தினால் வயிற்றுப் போக்கு விரைவில் நீங்கும்.
வெந்தயக் கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் புரதக்குறைபாடு நிவர்த்தியாகி உடல் பலம் அதிகரிக்கும்.
கண்பார்வை தொடர்பான பிரச்சினையுடையவர்கள்
வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
வெந்தயக் கீரை நரம்புத்தளர்ச்சியில் இருந்து எம்மைப் பாதுகாக்க உதவும். அத்துடன் வெந்தயக்கீரையில் உள்ள புரதச்சத்துக்கள், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
வெந்தயக் கீரையில் உள்ள விட்டமின் A மாரடைப்பு,
கண்பார்வை குறைபாடு, வாதம்,சருமப் பாதிப்புக்கள், இரத்தச் சோகை ஆகியவற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்க உதவுகின்றது.
எனவே எமது அன்றாட உணவில் வெந்தயக்கீரையை சேர்த்து உட்கொண்டு, ஆரோக்கியத்தினை பலப்படுத்திக் கொள்வோம்.