நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டரினை வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.
இப்படத்தின் அப்டேட்டுகளை அவ்வபோது வெளியிட்டு வரும் படக்குழு,ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று மாலை 6 மணிக்கு புதிய அப்டேட்டை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தனது 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.