அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வாழ்நாள் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அஜித் Sir, கனவு முழுமை அடைந்தது. இன்று அஜித் Sir இன் இறுதி நாள் படப்பிடிப்பு என பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டணி திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.