இவர், 15 ஆண்டுகளாக துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி தட்டில் என்பவரைக் காதலித்து வந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவாவில் கீர்த்தி சுரேஷ் - அண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது.
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.இதனையடுத்து திருமணப் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இதில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.விஜய் பட்டு வேட்டி சட்டையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திருமணத்தில் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படங்களுடன், "எங்களின் கனவு நபர் எங்களின் கனவு திருமணத்தில் வாழ்த்தியபோது.. அன்புடன் உங்கள் நண்பி மற்றும் நண்பா" என குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.