Google Drive தனது Android Mobile Scanning திறன்களை புதிய மேம்படுத்தல் அம்சத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கருவி, உங்கள் தொலைபேசியிலிருந்து நேரடியாக ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளின் தெளிவான, உயர்தர Scannகளை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
Scanner ஐ பயன்படுத்தி ஒரு படத்தைப் பிடித்த பின்னர் , பயனர்கள் முன்னோட்டத் திரையில் "மேம்படுத்தல்” விருப்பத்தைக் காண்பார்கள்.
இந்த அம்சம் தானாகவே வெள்ளை சமநிலை சரி செய்தல், நிழல் நீக்குதல், மாறுபாடு மேம்பாடு, கூர்மையாக்குதல் மற்றும் ஒளி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மேம்பாடுகளை பயன்படுத்துகிறது.
இந்த மாற்றங்கள், மெருகூட்டப்பட்ட, தொழில்முறை தோற்றமுடைய Scan ஐ உருவாக்க உதவுகிறது. பயனர்கள் தங்கள் Scanகளை JPEG கோப்புகளாக சேமிக்க அல்லது கறுப்பு மற்றும் வெள்ளை Filter-களை பயன்படுத்தவும் தேர்வு செய்து கொள்ளலாம்.
பயனர்கள் தங்கள் Android சாதனங்களில் Google Drive இன் பயன்பாட்டின் அண்மையப் பதிப்பை நிறுவிக்கொள்வதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம்.